என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கும்பல் கைது"
- நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார்.
- 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு பரிசோதனை செய்து அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தில் மர்மகும்பல் ஒன்று போலி மருத்துவத்தில் ஈடுபடுவதாய் சுகாதார மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் சாந்தி என்பவருக்கு தகவல் வந்தது.
சம்பந்தப்பட்ட நபர்களை ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி அதிரடியாக களத்தில் இறங்கி சுற்றி வளைத்தார்.
இந்நிலையில், வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார்.
ஒரு நபருக்கு 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு அவர் நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து அறிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 14ந் தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல் மணிக்கூண்டு அருகே செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏ.எஸ்.பி. சிபின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் எட்வார்டு போலீசார் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த கடைகள், சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கரூர் கல்லுமடையைச் சேர்ந்த அஜய் (வயது 24), ராயனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (21), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (21), கோவை சாய்பாபா காலனியைசேர்ந்த சத்தியசீலன் (23) ஆகியோர் 2 கடைகளிலும் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பழனி ஆயக்குடியில் 2 ஸ்டுடியோக்களில் பூட்டை உடைத்து 3 விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருடிய பணம், 3 கேமராக்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான்.
- மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவையை சேர்ந்த 43 வயதான நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பினார். இதற்காக இவர் ஆன்லைனில் வெளியான பல்வேறு தகவல்களை தேடி பார்த்தார்.
பின்னர் ஒரு செயலியில் வெளியான ஆயுர்வேத மசாஜ் குறித்த விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை காட்டி பல்வேறு விபரங்களை கேட்ட நபர், 8.25 லட்சம் ரூபாய் பெற்றார்.
ஆனால் ஆயுர்வேத மசாஜ் தரவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டது, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சேரன் நகரை சேர்ந்த ஹரிபிரசாத்(31) மற்றும் அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மகேந்திரன், தேவம்பட்டி சக்திவேல்(26), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி(23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(24), மற்றொரு சக்திவேல்(29), ஜெயபாரதி(22), மகேந்திரன்(30), கோகுல்(31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
அப்போது அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
இந்த கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான். அவனது தலைமையில் தான் இவர்கள் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் விரைவில் பணம் குவிக்க வேண்டும் என்ற ஆசையும், சொகுசாக வாழவும் ஆசைப்பட்டுள்ளனர்.
இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் லொக்கண்டா ஆப்பை பார்த்துள்ளனர்.
அதில் கவர்ச்சி படங்கள் இருப்பதையும், அதனை பலர் பார்ப்பதையும் அறிந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து இதனை வைத்து நாம் பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி லொக்கண்டா அப்பில் வரும் தகவல்கள் மற்றும் விபரங்கள் கேட்பவர்களின் தகவல்களை சேகரித்து கொண்டனர்.
பின்னர் சேகரித்த தகவல்களை வைத்து, அந்த நபரை செல்போனில் இவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
அப்போது அந்த நபரிடம் மசாஜ், கால் கேர்ஸ், விபசாரம் என பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாகவும், குறிப்பிட்ட ஓட்டல், ரிசார்ட்டில் சர்வீஸ் செய்து தரப்படும்.
உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
அங்கு குறிப்பிட்ட பெண்கள் வருவார்கள் என தகவல்கள் வெளியிடுவார்கள்.
அழகான பெண்களின் ஆபாச போட்டோ அவர்களின் விவரங்களை குறிப்பிடுகிறார்கள்.
மேலும் போட்டோக்களையும் அந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனை பார்த்ததும் சபலம் ஏற்பட்டு அவர்களும், மோசடி கும்பல் தெரிவிக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு சென்ற பின்னர் தான் அங்கு யாரும் இல்லை என்பதும், தன்னிடம் மோசடி நடந்ததும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி யாரும் புகார் அளிப்பதில்லை. இதனை இந்த கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும், இதற்காக இவர்கள் புதிய சிம்கார்டுகள், வங்கி கணக்குகள் தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பிட்ட ஆப்பில், பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாக கூறி தகவல்களை வெளியிடுகிறார்கள். அத்துடன் அவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார்கள். பெண்ணை பார்த்து அழகில் மயங்கும் வாலிபர்கள், அவர்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். பின்னர் ஓட்டல், ரிசார்ட்டுக்கு சென்று பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு இது மோசடி என்பது தெரியவருகிறது. பெண் ஆசையில் பணத்தை இழந்தவர்கள் அதை வெளியில் சொல்ல தயங்கி கண்ணீர் வடிக்கிறார்கள். அவமானம் கருதி புகார் தராமல் இருக்கிறார்கள். இதனை இவர்களை போன்ற கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் பாலாஜி (வயது 33). இவரை ஒரு கும்பல் நேற்று காரில் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்கு மாறும் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சின்னப்பள்ளம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பாலாஜி இருந்தார். அவரை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சைதலியை சேர்ந்த சிவக்குமார் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்த பிரபு (29) , செம்ப டம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் (36) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
5பேரும் பாலாஜியை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சாமியார் கதிரவன் தன்னிடம் புதையல் இருப்பதாகவும் ரூ.35 லட்சம் தந்தால் அதனை எடுத்து கொடுப்பதாக தனது நண்பரான பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் கடத்தல் வழக்கில் கைதான சிவக்குமார், கோவிந்தராஜ், சபியுல்லா, பிரபு, ராமச்சந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய 5பேரும் ரூ.35 லட்சத்தை பாலாஜியிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் சாமியார் கதிரவனிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கதிரவன் தலைமறைவாகி விட்டார். நீண்ட நாட்களாகியும் பாலாஜி புதையலை எடுத்து கொடுக்காததால் நேற்று 5 பேரும் பாலாஜியை தேடி திருப்பூர் வந்துள்ளனர். அப்போது 5 பேரும் புதையலை கொடுக்கா விட்டால் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளனர். பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் மாயமான கதிரவனையும் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
- வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.
- போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பேரூர் ரோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
உடனடியாக போலீசார் 5 பேரில் 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வாலிபரை காரில் கடத்திச் செல்ல காத்திருந்த திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(வயது27), திருப்பூர் பாலப்பாளையத்தை சேர்ந்த வெல்டர் விவேக்(29), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(28), திருப்பூர் குறிச்சி நகரை சேர்ந்த தென்பாண்டி(22) என்பது தெரியவந்தது .
பின்னர் போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ் மில் அருகே ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு வெள்ளை சீட்டில் எண்கள் எழுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆப்பக்கூடலை சேர்ந்த மணி (49), சித்தோட்டை சேர்ந்த தனசண்முகமணி (45), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (45), குமார் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
- கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருன் குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6, 150 பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
- காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
- பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன.
- மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சிந்தாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த முத்து மகன் சரவணபாரதி (வயது 22), திருச்சி சுப்புர மணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மணி (27), மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (23), பாஸ்கரன் மகன் கண்ணன் (19) என தெரியவந்தது.
இவர்கள் மீது திருச்சி, சிவகங்கை, கரூர், சிலை மான் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது, கூட்டுக்கொள்ளை அடித்தது, வழிப்பறி செய்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
- ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
திருப்பூர்:
ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ஈஸ்வரன், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 9 கிலோ கஞ்சாவும், 2 பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கடத்தலில் தொடர்பு டைய கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, செட்டி பாளையத்தை சேர்ந்த தீனதயாளன், பால கிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது . கடத்தல் கும்பலிடம் இருந்து 9 கிலோ கஞ்சா, 2 பட்டா கத்தி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலை மறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
- 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந்தேதி வேலை முடிந்ததும் அவரது நண்பரான முருகேசன் என்பவருடன் சுக்கம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அருகில் செல்லும்போது அவர்களுக்கு பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், 2 பேரையும் வழிமறித்து தாக்கியதுடன் சசிகுமாரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் சுக்கம்பாளையம் பகுதியில் சசிகுமாரிடம் செல்போனை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காசிராமன்(23), அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து(24), இசக்கி பாண்டி(32), செய்துங்கநல்லூரை சேர்ந்த மணிகண்டன்(27), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(23), பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ் குமார்(25) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை ,கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள விடுதிகளுக்கு அழகிகளை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மீண்டும் 26-ந் தேதி அதே பெண், என்னை தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா? என்றார்.
- கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோரால் பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்தால் 3 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி மேற்குபதி அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 63). இவர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 2-ந்தேதி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், கடந்த மாதம் 24-ந்தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், மசாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அழையுங்கள் என்றார். நான் சரி என்றதும் அன்று இரவு அந்த பெண் எனது பர்னிச்சர் கடைக்கு அருகே உள்ள அறைக்கு வந்து மசாஜ் செய்து விட்டு ரூ.1,200 வாங்கி சென்றார்.
பின்னர் மீண்டும் 26-ந் தேதி அதே பெண், என்னை தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா? என்றார். அன்று இரவு அதேபோல் அறைக்கு வந்து மசாஜ் செய்தபோது திடீரென்று அறைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி என்னுடைய ஆடைகளை களைய சொன்னார்கள்.
பின்னர் அந்த பெண்ணையும், என்னையும் சேர்த்து வைத்து நிர்வாணமாக படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் என்னிடம் இருந்து 1 பவுன் தங்க மோதிரம், ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை பறித்தனர். ரூ.2 லட்சம் கொடு, இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த பெண் உள்பட 3 பேரும் சென்று விட்டனர். அந்த பெண்ணும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு எனது ஏ.டி.எம். கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டம் சின்னாண்டவர் கோவில் ரோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் (21), அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (21), உடுமலை எலையமுத்தூரை சேர்ந்த புஷ்பலதா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோர் மசாஜ் செய்வதாக கூறி சண்முகராஜ் மட்டுமின்றி திருப்பூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்களை வரவழைத்து நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் வாலிபர்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது. அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் புகார் தெரிவித்தால் அவமானமாகி விடும் என்பதால் யாரும் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனை தங்களுக்குசாதகமாக பயன்படுத்தி கொண்ட 3 பேரும் தொழிலதிபர்களை மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளனர். சண்முகராஜூம் முதலில் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளார். 3 பேர் கும்பல் பணம் கேட்டபோது அவர் அணிந்திருந்த செயின், மோதிரத்தை விற்று பணம் கொடுத்துள்ளார். இது அவரது மனைவிக்கு தெரியவரவே , அதன்பிறகே அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோரால் பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்தால் 3 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மசாஜ் செய்வதாக கூறி அழைத்து தொழிலதிபர்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்